கள்ளக்கோடாரிகள்-இது எங்கள் நாட்டுக்கலாச்சாரம்
இப்போதெல்லாம் பல குடைகள்
இப்படித்தான் தலைகுனிந்த படியே
கிடக்கின்றது.....
ஏனென்று அருகில் போய் பார்த்தால்
அருவருப்பாய் இருக்கிறது.....
காதலர்களின் வருகையால்தான்
கடற்கரையில் கூட.
கற்பழிப்பு காட்சிகளை இலவசமாய்
பார்க்க முடிகிறது....
அமெரிக்க கடற்கரை கூட
முத்தத்தில் பின்வாங்கி விட்டது.....
எங்கள் மெரினாக்கடலில்
புயல்காற்று புகைந்து கொண்டே
யிருப்பதால்........
எங்களை புதைக்க கூட
ஆறடி வேண்டும் ........
ஆனால்
மூன்று அடிக்குள்ளே குடும்பம்
நடத்தி விடுவோம்......!!!??
நேற்று காதலித்தோம்
இன்று மணம் முடித்தோம்.....
முதலிரவு ஏற்கனவே முடிந்து
விட்டது....
நாளை மறுநாள் நீதிமன்றம்
போவோம்.....
காரணம் நேற்று முன்தினம்
பார்த்த வழக்கறிஞர்
அவ்வளவு அழகாய் இருப்பார்.....!!!!
(கள்ளத்தனமான கலுசடைகள்)