அதுவன்றி வேறேது
ஒரே ஒரு நினைவுத் துளிபட்டு
கனவுகளில் முழுதாய்
நனைந்திட இயலுமெனில் ....
ஒரே ஒரு செயற்புயலில் துரும்பாய்
மனமிளகி விண்முட்டிப் பறக்க
முடியுமெனில் .....
ஓரிரு மணித்துளிகள் என் வாழ்வை
ஓராயிரம் கனவுகளுக்குள்
அமிழ்த்துமெனில் .....
முகம் மலர்ந்து - அகம் திறந்து
ஜெகம் துறந்து - உயிர் மறந்து
நான் - நீயாகுமந்த
ஒரே ஒரு கணத்தில்
ஒரு யுகமாற்றம் நிகழுமெனில் .....
அதற்கு முழு முதற்காரணம்
உன் முதல் முத்தம் தவிர
அன்பே வேறேது...
------ " செல்லம் " ரகு