மொழி

எழுத்துகள் பிறப்பிடத்தில் நாம்
பிறபிடத்தில் இடத்தில் தமிழ் ...
உலகறிய தந்த மறை குறள்
மனிதனின் மனதை இரண்டடியில்
மகத்தான எளிய நடையில்
விளக்கம் தந்த அகத்துபால் ....

வாழ்வின் அணைத்து இன்னலையும்
மனித அத்தியாவிசையதையும்
வாழ்வின் அடிப்படை தத்துவங்களையும்
ஈரடி வெண்பா தந்த வள்ளுவன்
கொண்ட நாடிது.....................

கலவியலின் உன்னதத்தை
எடுத்துரைத்த காமத்துபால்
தந்த நூல் திருக்குறள் ......

பாடலின் வரிகளில் துடிப்பை ஏற்றி
இளைஞர் மனதிலும் தேச உணர்ச்சியை ஊற்றி
பாரதமெங்கும் பாடல் வரிகளால்
கவிதை நயதினால் விடுதலை
உணர்ச்சி ஏற்படுத்திய மகாகவி
மலர்ந்து உதிர்ந்த பூமி .........

நமை பார்த்து உலகே !வியக்கும்

நாகரிக பெண்மை நம் நாட்டு புடவை .........

மலரினும் வாசம்மிகுந்த மல்லிகை ...

மங்கையரின் கூந்தல் அலங்காரம் ...

வெண்ணிற கதர் ஆண்களின் அடையாளம் ...

கதர் ஆடையை கண்டு ஆங்கிலேயனும் நடுங்க ....

கதரின் பலம் விடுதலை வாகை .......

பெரியாரின் கதர் பகுத்தறிவு சிந்தனை

கர்மவீரரின் கதர் நாட்டு மக்கள் சேவை ...

அண்ணல் காந்தியின் கதர் அறவழி வேட்கை .....

இன்றைய கதர் கவிஞனின் புரட்சி ........

வாழ்க தமிழ் !வளர்க தமிழ் !

எழுதியவர் : சு முத்து ராஜ குமார் (26-Mar-15, 12:58 am)
Tanglish : mozhi
பார்வை : 175

மேலே