நீ எனை ஏற்பாய் என்று

இரண்டறக் கலந்தவனே ;;;;;;;;;
என் இதழ் உச்சரிக்கும் -உன்
பெயரைத் தினமும் சொல்லிய படி
இரு மடல்களும் இதயம் போல
உனைக் காணும் போதெல்லாம்
துடித்துக் கொண்டுதான் இருக்கின்றது
இன்றும் .........
என் தவிப்புக்களை
தலை சாய்ந்து தூங்க வைத்துக் கொண்டு
உன்னை மட்டும் கனவில்
சுமந்த படி கலைகின்றதே -என் உள்ளம்
இப்பொழுது... ..........
உன் விழிகளைத் திருடிக் கொண்டு
என் நினைவுகளை சேமித்துக் கொண்டேன்
நீ எனை ஏற்பாய் என்று ~~~~~~~~~~~!