சுவர்

நிழல் படாத
பெருந்திரையின்
நிசப்தத்தின் கோடுகள்
நிலையில்லாமல் வரையத்
தொடங்கிய கோலத்தின்
மத்தியில்
குவிந்திருந்தன
மரியாதைக்குரிய
மௌனப் புள்ளிகள்.
உயர்வெது தாழ்வெது
என உணர்வதை
விடுத்துப்
புரிதலில் புலப்படாத
புதிர்கள் மட்டும்
புத்திக்கு
அப்பாற்பட்டு நிற்க
பொறுமைகள் நிலை
உணர்ந்து கட்டிக் கொண்டன
பிரிதலுக்கான சுவரை ...

எழுதியவர் : உமை (2-Apr-15, 10:39 pm)
Tanglish : suvar
பார்வை : 82

மேலே