பேய் பிசாசு ஆவி ஜோக்ஸ்
1.
“ ஏங்க, இந்தப் பக்கம் ஆவி நடமாடறதா சொல்றாங்களே, உங்களுக்கு ஏதும் தெரியுமா?”
“ எனக்கு எப்படிங்க தெரியும்? நான் செத்துப் போயி பத்து நிமிஷம் தானே ஆகுது? ”
................................................................................................................................................................................................
2.
பூச்சாண்டித் தாயார் தன் பூச்சாண்டிக் குழந்தையிடம்:
“ சாப்பிட அடம் பிடிச்சா மனுஷன் கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன்... ! ”
(குழந்தை கப்பென்று சாப்பிடுகிறது ! )
...............................................................................................................................................................................................
3.
ஆவிக் காதலி தன் ஆவிக் காதலனிடம்....
“ நீ என்னைக் கை விட்டா எனக்குப் "பிறக்கிறதைத்" தவிர வேறு வழியில்ல... ! ”
...............................................................................................................................................................................................
4.
“ ஏன்யா, இதைப் பார்த்தா கல்லறை மாதிரி தெரியுதே? இது மேல உட்கார்ந்து ஏன் சுருட்டுப் பிடிக்கறே? ”
“ உள்ளே ஒரே புழுக்கம்யா... ! அதான் எழுந்து வெளியில் வந்தேன் ! ”
................................................................................................................................................................................................
5.
“ என்ன ஆஸ்பத்திரியில ஒரே சத்தம்? ”
“ ஆவிகள் நம்ம டாக்டருக்கு பாராட்டு விழா நடத்துதுங்க; அதுங்க எண்ணிக்கைய அதிகப்படுத்தி விட்டதே அவர்தானே? ”
..............................................................................................................................................................................................
6.
ஒரு ஆவி இன்னொரு ஆவியிடம்...
“ புளிய மரமும் முருங்கை மரமுமா இருக்கிற நம்ம காலணியில கடைசி மரத்து ஆவிக்கு
என்ன ஆச்சு? ”
“ காலங் கார்த்தால கான்க்ரீட் கட்டடம் பக்கம் தனியா போகாதேன்னா கேட்டாதானே? ஏதோ "மனுஷன் பிடிச்சுகிச்சு"; ஜாதி மதம்னு ஆடிட்டிருக்கு! ”
................................................................................................................................................................................................