சான்டாகி ளாஸ்கிராமத்தில் ஈஸ்டர் விடுமுறை

தற்சமயம் பின்லாந்தின் தலைநகர் ’ஹெல்சிங்கி’யில் TCS க்காக பணியாற்றும் என் இளைய மகன் கிருஷ்ணகுமார், இலண்டன் நகரில் வசிக்கும் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை வடபின்லாந்தின் ரோவனைமி என்ற நகரின் சான்டாகிளாஸ் கிராமத்திற்கு அழைத்துச் சென்று வந்தார். அங்கேயே இரண்டு நாட்கள் தங்கி ஈஸ்டர் விடுமுறையைக் கொண்டாடினர்.

கந்ததாசனின் பாட்டையொற்றி ஒருவிகற்ப பாட்டில் இருவிகற்ப பாட்டைத் தருங்கல்ப காயத் தமிழ்

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

குடும்பமுடன் சான்டாகி ளாஸ்கிராமம் சென்று
விடுமுறையில் மேன்மையுடன் வேண்டி மகிழ்ந்து
சடுதியில் ஏனோ திரும்பிடாமல் அங்கே
விடுதியில் தங்கினர் நன்று.

இரு விகற்ப நேரிசை வெண்பா

சடுதியில் ஏனோ திரும்பிடாமல் அங்கே
விடுதியில் தங்கினர் நன்று - விடுமுறையில்
மேன்மையுடன் வேண்டி மகிழ்ந்து குடும்பமுடன்
சான்டாகி ளாஸ்கிராமம் சென்று. 1

சடுதியில் ஏனோ திரும்பிடாமல் அங்கே
விடுதியில் தங்கினர் நன்று - குடும்பமுடன்
சான்டாகி ளாஸ்கிராமம் சென்று விடுமுறையில்
மேன்மையுடன் வேண்டி மகிழ்ந்து. 2



.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Apr-15, 1:28 pm)
பார்வை : 92

மேலே