அவளை சேராத என் காதல் கடிதங்களும் அவளுக்காக எழுதிய கவிதைகளும்.......................



சொல்லாத என் காதலுக்கு
ஆயுள் அதிகம் தான்
நான் சொல்ல நினைத்தும்
சொல்ல முடியாமல்
நினைவிழந்து போனது
என் உதடுகள்

என் பேனாவுக்கும்
இதயம் உண்டு அதுவும்
துடித்தது அவள்நினைவில்
அவளுக்காக

எண்ணங்களை வரிகளாக்கி
பூக்களாக சரம் தொடுத்து
கவிதைகளாக கொட்டியது
என் பேணாமை
அந்த வெள்ளை காகிதத்தில்

அவளிடம் சொல்ல முடியாத
என் காதல் வார்த்தையாக
எழுத்துக்களாக கவிதைகளாக
அந்த வெள்ளை காகிதம் முழுவதும்
படர்ந்தது

கடைசி பக்கத்தின் கிழே என் பெயரை எழுதி
கையொப்பம் மிட்டு நான்காக மடித்து
சட்டைப்பையில் வைத்துக்கொண்டு
நடந்தேன் அவள் வரும் பாதை நோக்கி

என் பிறந்த காலமும்
என் இறந்த காலமும் ஒன்றாக
ஓடிக்கொண்டிருந்தது
அவள் பதிலுக்காக
என் என்ன ஓட்டத்தில்

சாலை எங்கும் அமைதியாய்
என் மனதிலோ பூகம்பமாய்
நடுநடுங்கி கொண்டிருந்தது
என் சட்டைப்பையில்
அவளுக்காக எழுதிய
என் காதல் கடிதம்

தொலைவிலோ சூரியனை போல
பிரகாசமாகஅவள் முகம்
தென்றலை போல இதமான
அவள் வருகை

அவள் நெருங்க நெருங்க
இதயம் வேகமாக துடித்தது
அவள் என்னை கடக்கும் போது
என் இதயமும் என் காதல் கடிதங்களும்
அமைதியாய் பயத்தில் மௌனமாகி போனது

மௌனத்தை கலைத்து அவளிடம்
பேச நினைத்த போது அவள் என்னை கடந்து
தொலைவிலே சென்று கொண்டிருந்தால்

என் காதலை சொல்லவும் முடியாமல்
காதல் கடிதங்களை கொடுக்கவும் முடியாமல்
ஏமாற்றத்தோடு திரும்பினேன்

பயத்தில் இறுதி வரை என் காதல்
அவளுக்கு தெரியாமலேயே போனது
அவளுக்காக எழுதிய
காதல் கடிதங்களும் கவிதைகளும்
அவளை சேராமலேயே போனது.....................

எழுதியவர் : நந்தி (2-May-11, 2:05 pm)
பார்வை : 546

மேலே