சட்கோண பந்தனம்

என் தகப்பனார் அவரது 25 வயதிலேயே Ration க்காக அரசாங்கத்திற்குத் தர வேண்டிய levy யாக தந்தது போக அரசு விலைக்கே பொது மக்களுக்கும் நெல் தந்ததைப் பாராட்டி, Control கன்னியப்ப முதலியார் என்று பெயரெடுத்த பெருந்தகை.

திண்டுக்கல் நகரைச் சேர்ந்த கந்தசோலை கவி கா.ம.காளிதாஸ் அவர்கள் என் தந்தையார் சோழவந்தான் திரு.ச.கன்னியப்ப முதலியார் அவர்கள் பேரில் (38 வயதில்), அவர்களைப் பாராட்டி 1961 ல் அளித்த சட்கோண பந்தனம்.

நேற்றுத்தான் கீழேயுள்ள வடிவமும், வெண்பாவும் அறிந்து கொடுக்க முடிந்தது.

இரு விகற்ப நேரிசை வெண்பா

தூயநய நேயஜெய தாயனய சம்பிர
தாயனருள் ஐயப் பசாமிச - காயமிக
மன்னியெ(எ)ப் போதும் வழங்கு கொடையாளி
கன்னியப் பேந்திரன் காண்.

எழுதியவர் : கவி கா.ம.காளிதாஸ் (9-Apr-15, 10:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 160

மேலே