மோகனமே
சஞ்சலம் சஞ்சலம் உண்டாகும்,
நீ பிரிந்தால் சாதல் சாதல் இங்கே!
♦
யான் தவித்திட்ட பொழுதில்
தவறாமல் எம்மை அணைப்பாய்.
யான் தலைசா ய்ந்திடவே
உம்மடி தருவாய்.
அம்மை எனக் குநீயல்லவா!!
இன்றோ விட்டுவிடுமறந் துவிடு
என்கிறாய் !!!!!
சஞ்சலம் சஞ்சலம் உண்டாகும்,
நீ பிரிந்தால் சாதல் சாதல் இங்கே!!
♦
பழகி யநாளோ குறைவு குறைவு,
என் மனத்தில் நீயோ இமய
மலையின் உயர்வு உயர்வு.
எட்டி நீபோ னாலும் நெஞ்சு
எட்டி எட்டி பார்க்காதோ!!!
இன்று நீ போவதோ நிரந்திரம்.!!
சஞ்சலம் சஞ்சலம் உண்டாகும்,
நீ பிரிந்தால் சாதல் சாதல் இங்கே!!
♦
மனத்திரையை கிழித்துப்பார்
மோகனமே உன் முகமே!!
இரு விழியை உற்றுப் பார்
அது உன் விழியல்லோ!!!
இருதயத்திலே உன் செவி
வைப்பாயோ -உன்
குரலை அங்கு நீ கேளாய்!!
என் அங்கம் முழுதும் உன்னால்
நிரம்பியதோ ஒரு பாதி.
அதை மறந்திட்டு போகிறாய்!
சஞ்சலம் சஞ்சலம் உண்டாகும்,
நீ பிரிந்தால் சாதல் சாதல் இங்கே!!
♦