பாடல்
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்
நான் அதை பாடவில்லை…ஹோய்
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை
கூடொன்று கண்டேன் குயில் வர கண்டேன்
குரலால் அழைக்கவில்லை ஹோய்
குரலால் அழைக்கவில்லை
ஏடொன்று கண்டேன் எழுதிட கண்டேன்
நான் அதை எழுதவில்லை ஹோய்
நான் அதை எழுதவில்லை
குணமும் அறிவும் நிறைந்தவர் என்றார்
நான் அதை சொல்லவில்லை….
நான் அதை சொல்லவில்லை
( ஆடி முடிந்தது ஆவணி வந்தது
பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது
நாடகம் போலே தூது நடந்தது
காதலர் கண்ணாலே…)
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்
நான் அதை பாடவில்லை…ஹோய்
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை
நான் சொன்ன வார்த்தை அவர் மட்டும் கேட்டார்
சிரித்தார் பேசவில்லை…ஹோய்
சிரித்தார் பேசவில்லை
அவர் சொன்ன வார்த்தை நான் மட்டும் கேட்டேன்
சிரித்தேன் காணவில்லை….ஹோய்
சிரித்தேன் காணவில்லை
இருவர் நினைவும் மயங்கியதாலே யாரோடும் பேசவில்லை
யாரோடும் பேசவில்லை
( ஆடி முடிந்தது ஆவணி வந்தது
பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது
நாடகம் போலே தூது நடந்தது
காதலர் கண்ணாலே…)
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்
நான் அதை பாடவில்லை…ஹோய்
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை