தூறலாய் ஒரு காதல்
அது ஏனோ தெரியவில்லை
இப்போது எல்லாம் மழை பெய்தால்
மண் வாசனை வருவதற்குள் ,
கவிதை வந்து விடுகிறது எனக்கு
உன்னோடு நான் நினைந்த ,,
இல்லை இல்லை
உன்னோடு நான் கரைந்த
அந்த மழை நாள் முதல் ....
என் தாய்
எனக்கு பேச கற்றுகொடுத்தார்
என் தந்தை
எனக்கு நடக்கக் கற்றுகொடுத்தார்
என் ஆசான்
எனக்கு எழதக் கற்றுகொடுத்தார்
ஆனால்
எனக்கு மழையில்
நினையக் கற்றுகொடுத்தவள்
நீதான் ....
முன்பெல்லாம்
மழையில் நினைந்தால்
சளி பிடிக்கும் ,,,
உன்னோடு நினைந்த பிறகு
மழையும் பிடிக்க ஆரம்பித்தது ....
மழை - இது ஒரு திரவப் பூ ,
உன் கூந்தலில்
தேங்கி இருக்கும் போது ..
உன்னோடு நினைந்து
பழகிய பிறகு
நான் குடை
பிடிப்பதே இல்லை
எந்த மழைக்கும் ..