பாடசாலை விட்டு வீடு திரும்பு கையில்

மதியம் இரண்டு மணி அடித்து
பிடித்து பாட புத்தகங்கள் மேசையில்
இருந்து பையில் அடைந்ததும்
இறுதி மணி ஒலிக்கையில்
பாடசாலை கீதத்திற்கு தயாராகி
நிற்கின்ற போது ஒற்ற காலில்
நெளிந்து உரசிக்கொண்டு
சின்ன குறும்புகள்

பாடசாலை கீதம் முடி
வடைந்ததும் புத்தகப்பை
யை தோள் கட்டையில்
சுமந்து கொண்டு செல்லும்
போது ஓரக்கண்ணால்
பார்க்கும் ஆண் நண்பர்களுக்கு
பார்வையால் கண்டனம் தெரிவித்து
மிதி வண்டி தரிப்பு இடத்தை
நெருங்கியதும் சில மணி நேரம்
உரையாடி விட்டு மிதி வண்டியை
நகர்த்தி கொண்டு கால் நடை பயணம்

தோழிகளுடன் அலாவி செல்ல
சண்டையிட்ட பின்னர்
மிதி வண்டியை மிதித்து கொண்டு
வீதியை வேடிக்கை பார்த்து செல்லும்
போது தெரு நாய்கள் வம்பு
சண்டை தொடுத்து காதல் வலை
வீச கண்டும் காணததை போல
கூனிக்குறுகி உடல் நடுக்கம்
உற்று விழி பார்வை தடுமாறாமல்
உறுதி கொண்டு வீடு திரும்புகின்றோம்

எழுதியவர் : தளசி (12-Apr-15, 9:54 am)
பார்வை : 173

மேலே