வடை போயிடுச்சே

வடைக்கு பெயர் போன கடை ஒன்று இருக்கு. இரண்டு வடை சாப்பிட்டு ப்ளேன் டீ ஒன்றும் குடிச்சா போதும். வேறொன்றும் தேவையில்லை.
நம்ம சுப்பையா அண்ணே வழமையாக அங்கு சென்று வடை சாப்பிடுவது வழமை. அன்றும் சென்றார்,

"சுப்பையா அண்ணே... இண்டைக்கு சமோசா போட்டிருக்குறோம் சுப்பர்ரா இருக்கு... சாப்பிட்டு பாருங்க..." கடையில நிற்கிற பையன் கூறினான்.

"இல்லைடா... வழமையா வடை தானே நல்ல இருக்கும். வடை சாப்பிடுவம் என்று தான் வந்தேன்."

"பரவாயில்லை அண்ணே... வடை எடுத்து வைக்கவா...?"

"ம்..... வேண்டாம்பா. இண்டைக்கு சமோசா தானே நல்ல இருக்கு என்றாய்... வடை வேண்டாம்..." கூறிவிட்டு கிளம்பினார்.

"ங்....." கடைக்கார பையன்

எழுதியவர் : சந்திரா (13-Apr-15, 10:00 pm)
பார்வை : 501

சிறந்த நகைச்சுவைகள்

மேலே