சித்திரைப் பெண்ணாள்-ரகு

இத்தரை மீதிற்
சித்திரைப் பெண்ணாள்-இன்ப
முத்திரை தெளித்திட
வந்தாள்

வையத்து நிகழ்வு
வளமாதல் காண -இனிதே
வாசலில் வந்தவள்
நின்றாள்

பெண்ணினம் செழிக்கப்
பேதைமை ஒழிக்க -இன்று
புவிகாணும் சித்திரை
அன்றோ

அண்டங்கள் குளிர
அழிவின்மை நிற்க -மனிதம்
அழகியலாய்ப் பூத்திடு
மன்றோ

தும்பியின் சிறகினிற்
சிந்தியப் பனித்துளி -என்றேச்
சித்திரை தழுவிநாம்
உலவுவோம்

வெம்புலம் வெல்கவல்ல
வீரியங் கொண்டு -வாழ்வில்
வண்மையை எவ்வுயிர்க்கும்
நல்குவோம்
----------------------------------
தோழர் தோழமைகளுக்கு எனது இனியச் சித்திரைத் திருநாள்
வாழ்த்துக்கள்
------
அன்புடன்
-சுஜய் ரகு -

எழுதியவர் : சுஜய் ரகு (14-Apr-15, 9:09 am)
பார்வை : 121

மேலே