தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து 

முக நூலில் 
நுழைந்தால்
நண்பர்களின்
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து  
ஆங்கிலத்தில்...!!!

எழுத்துரு பிரச்சனையோ
என எண்ணிக்கொண்டே
தொலைக்காட்சிக்கு மாறினேன் - என் 
தாய்த்தமிழை கடித்துக் குதறி
வாழ்த்திக் கொண்டிருந்தனர்...!!!

அலைபேசி சிணுங்கிட
எடுத்து காதில் வைத்தால்
மறுமுனையில் 
மீண்டும் ஆங்கிலத்தில் 
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து...!!!

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (14-Apr-15, 12:35 pm)
பார்வை : 456

மேலே