சின்ன சின்ன ஆசைகள்

கொஞ்சமாய் அன்பு வேண்டும்
கொஞ்சி பேசிட
நீ என்றும் கூடவே வேண்டும்
மஞ்சத்தில் துயில் கொள்ளவேண்டும்
மனதோடு
என்னை அணைத்திடவேண்டும்
ஊரெல்லாம் சுத்திட வேண்டும்
இடையிடை முத்தம் வேண்டும்
கிட்செனில் கிஸ்சும் வேண்டும்
கிட்ச்கிச்சு மூட்டவும் வேண்டும்
நீ தொட்டதை ரசித்திட வேண்டும்
நீ தொடத்தொட ஆசையும் வேண்டும்
பொன் நகை சூடி நீயும்
புன்னகையில்
ஜொலிக்க வேண்டும்
எண்ணங்கள் ஒவ்வன்றாக
தினம் தினம் சுவைத்திட வேண்டும்
வாழ்வது ஜெயிக்க வேண்டும்
வரலாறு இதை சொல்லிட வேண்டும்
சில நொடி ஊடல்கள் போதும்
பின்னர் மன்னித்து மயக்கும்
கொஞ்சல்கள் வேண்டும்
பொய்யில்ல வாழ்க்கை வேண்டும்
கனவெல்லாம் இனி
நிஜமாகிட வேண்டும்
இறப்பென்று ஒன்று வந்தால்...….
இறப்பென்று ஒன்று வந்தால்...….......
நம் உடல் கூட
சேர்ந்தே காடுசேரட்டும் !!!!!