இஸ்லாமிய சமூகங்களில் இருந்து முற்போக்காளர்கள் வர வேண்டும்

இஸ்லாமிய சமூகங்களில் இருந்து முற்போக்காளர்கள் வர வேண்டும்....
குறிப்பாக பெண் எழுத்தாளர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்....என்கிறோம்..!

10 வருடங்களுக்கும் மேலாக பத்திரிகையாளராக உள்ள இவர், தற்போது International Movement of Against all form of Discrimination and Racism (IMADR) மனித உரிமைகள் நிறுவனத்திலும், Women Political Academy – Intern ஆக பணிபுரிகிறார்.

சமூக அபிவிருத்தி, பெண் விழிப்புணர்வு போன்ற விடயங்களில் செயற்பாட்டாளராக இயங்குகிறார்.
சமூக விஞ்ஞானம் மற்றும் ஆங்கில இலக்கியம் என்பவற்றை பிரதான பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பையும், சட்டமும் பயின்று வருகின்றார் ஷர்மிளா சையத்.

எதுவரை இணையத்தில் 2012 - ல் - போரும் பெண்களும் அபாய சமிஞை - கட்டுரையில் இணையத்தின் ஆசிரியர் குறிப்புகள் இவை....

இணையத்தில் வைத்து கொலை செய்யப்படும் எழுத்தாளர்கள்...பெண் எழுத்தாளர்கள் என்றால் கற்பழித்து கொலை செய்யப்படும் அவலம் ...!

சிறகு முளைத்த பெண் - கவிதை நூல்.
உம்மத் - நாவல்
இரண்டு கவிதை நூல்களும் ஒரு நாவலும் மற்றும் ஏராளமான கட்டுரைகளும் எழுதியுள்ளார்....

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விருது வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது...

பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு சட்ட பாதுகாப்பும் சட்ட அங்கீகாரமும் வேண்டும் என்கிறார்...
புர்கா முகம் மூடிய விதத்தை கண்டிக்கிறார்...
புர்கா கட்டாயம் என்பதையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார்...
தென் இலங்கையில் தாலிபானிய கட்டுப்பாடுகளை உடைத்தெறிய வேண்டும் என்று சொல்கிறார்...

இதனாலேயே ஆயிரக்கணக்கான தொலைபேசி மிரட்டல்...இவரது தங்கைக்கு கொலை மிரட்டல்...
இவருக்கும் சேர்த்தே...இவரது தந்தை செய்யத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்....
தற்பொழுது வீட்டிற்குள்ளே முடங்கியுள்ள அவலம்...மாற்றுக் கருத்துக்களை வரவேற்கப்பட பழக வேண்டும்....அப்படி வரவேற்கப்பட முடியவில்லை....கோபம் கொள்ள வைக்கின்றன என்றால் மத சீர்திருத்தம் அவசியம் என்ற தேவை எழுகின்றன...

எவ்வாறு இந்து மதத்திற்கு சீர்திருத்தம் தேவையோ...
எவ்வாறு இந்து மத அடிப்படைவாதிகள் ஒழிக்கப்பட வேண்டுமோ....
அதுபோல இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் ஒழிக்கப்பட வேண்டும்....
அதுபோலவே இஸ்லாமிய சமூகத்திற்கும் தேவை...
பௌத்த.... ஏன் அணைத்து மதத்திற்குமே இந்த சீர்திருத்தம் தேவையான ஒன்று தான்.....

நாம இவ்வளவு நாசூக்காக ஏன் எழுதுகிறோம் என்றால்....உலகில் வாழும் இஸ்லாமிய மதங்களை பின்பற்றுபவர்களில் கிட்டத்தட்ட 80 சதவீத மக்கள் இன்னும் ஜனநாயக பக்கமே வர விடாமல் / ஜனநாயக காற்றை சுவாசிக்க விடாமல்.....

நாட்டின் ஆயில் வளங்களை திருடிக் கொண்டிருக்கும் அராபிய ஷேக்குகளும் அவர்களின் முல்லாக்களும் இவர்களின் கொடும் அரசுகள்.....கல்லெறிந்தும் கசையடி கொடுத்ததும்...பொதுவெளியில் தலை கொய்தும் அந்த சமூகங்களை குறிப்பாக வளைகுடா நாட்டு மக்களை சொல்லொன்னா துயரத்தில் அடிமை படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதால் இந்த மென்மையான வார்த்தைகளில் எழுதுகிறோம்.....

இல்லை...இல்லை... என்றால் ஆசாத் அவர்களை எதிர்த்து போராடுவதும்...வளைகுடா வசந்தத்தை ஆதரிப்பதும் கொடும் குற்றம் என்று நாட்டின் ஆயில் வளங்களை கொள்ளையடிப்பவன் கூறுவது முற்றிலும் உண்மை என்றாகி விடும்....

ஏன் கருத்துக்களை எதிர் கொள்ள முடியவில்லை...ஃ பத்வா கொடுக்கும் அளவிற்கு எந்த அராபிய கொள்ளையர்களுக்கும் அல்லது கொள்ளையர்களுக்கு துணை நிற்பவர்களுக்கும் எந்த யோக்கியதையும் / அருகதையும் உள்ளவர்கள் இல்லை எனலாம்....!

மதங்கள் அனைத்துமே சீர் திருத்தும் வேண்டி....ஒற்றைக் காலில் கடும் தவம் மேற்கொண்டது போக....தற்பொழுது ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டன எனலாமா...?

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (17-Apr-15, 3:40 pm)
பார்வை : 276

மேலே