தேடல்
மறக்க முடியாமல் மரணித்துக் கொண்டிருக்கின்றது
மனது நீ தந்த அழகான நாட்களை நினைத்து
என் விருப்பங்களை வின்மீன்களிடம் விண்ணப்பித்தேன்
விடியும் வரை புன்னகைக்கின்றது ஏனோ மௌனமாக!
முழு நிலவில் நீ பவனி வருவாயென
பாயில் விழித்திருந்து பார்க்கின்றேன்
கனவுகளில் நீ வராத வரைக்கும்!
என் வார்த்தைகள் வயதுக்கு வந்த பின்னர்தான்
வசந்தம் உன்னால் தொலைந்து போனது
உன்னைத் தேடித் தேடி என் பேனைகளும் வெறுமையாகின
ஆனாலும் தேடிக்கொண்டே இருப்பேன்.
உன்னை என் உயிர் போகும் நாள் வரைக்கும்