காணா முள்ளொன்று உள்ளேறியதுபோல்
காணா முள்ளொன்று உள்ளேறியதுபோல்
=====================================
வாய்சிமிட்டி கைக்குடுடா என்றவளை
அலுங்காமல் தூக்கிச்சென்று
இருச்சக்கர வாகனத்தின் பின்கிடப்பில் அமர்த்தினேன்,,,,,!!!
அவளோ உயர உயர காற்றுமோத நின்றுகொண்டு
உயிர் முளைத்த பூங்காவாய்
குதூகலிக்கிறாள்
எனக்கோ கதனமுடுத்திய களம் வென்றோனாய்
கரம் முறுக்கியதும்
அப்படியொரு ஆசுவாசம்,,,,,!!!
அணைத்தல் நிறைவேறாத கனவொன்றின் முடிவில்
விசராகி முடிவிலியாகிறது
நாயகி அவள்
நாயகன் நான் என்ற அசடுமட்டும்
கொஞ்சங்கூட குறையாமல்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!!!
திரும்பிப்பார்த்த
விழிகளுக்குள்ளே வீழவில்லை
பகரம்,,,கரைசேராத கரைசலாகிப்போனேன்,,,,,,,,,,,,,,,,,,,,!!!
நமட்டுச் சிரிப்புக்கு பின்னால்
அர்த்தங்காட்டிப் போகும் அவளே சொல்லட்டும்
கரைத்தவள் அவள்தானே
இனி பிரித்தெடுக்கமுடியுமா என ம்ம்ம்ம்,,,,,,,,,,,,!!!
தேடினால்
கிடைத்துவிடும் அருகாமையில்தான்
அகற்றிவிட்டுப் போயிருப்பாள்போல்
திரையிட்ட போலித்தனங்கள்
ஒன்றொன்றாய் அவிழ
துலக்கிடும் வரிகளின் நீட்சிக்கு
இலைமறையாய் இருக்கும் அவள் மௌனத்தை ம்ம்ம்ம்,,,, !!!
என் பரு(வ)நுனியில் அவள் பார்வைமுனை ம்ம்
திருட்டுத்தனமாய் சேமிக்கலாமென்றால்
நிரம்பிவழிகிறாயே காதலே,,,,!!!
பார்வைத்தடுப்பின் எல்லையை
சுயம் பதறாமல்
உடைக்கின்றவளின்
களவுத்திறனின் தூரம்
எவ்வளவு என்று சொல்லிச்சொல்லி
பித்தான முதிர்மனம் இன்று
அறையின் கதவடைத்துவிட்டு
பருவம் பின்னோக்கிப்போகிறது
தனக்குத்தானே
புனர்நிர்வாணம் பூசிக்கொண்டு ம்ம்ம்,,,,,,,,,,,,,,,,,,,,,,!!!
அனுசரன்