ஏது உலகில் ஒப்பே

ஏது...? உலகில் ஒப்பே...!
மனிதனுள் -
புத் அகம் பூக்கவே...!
புவிதனை புதிய தாய்
யாத்த தேன்...!
அமிழ்தினும் அலகிலா
அறிவெனும் சுடரே....!
உன் -
கவின் தனை காட்டி
கருத்தினை ஏற்றி....
எம் -
கனவின் தீ மூட்டி....
காரியம் யாவினும்
வீரியம் கூட்டிடும்
வேள்வியே....!
உன்னை -
பயில்தொரும்...
படைத்தவரிதய -
கைகளை குலுக்கிடும்
பாக்கியம் பெறுவதும்....!
நீ...
பயணித்த -
மனத்திடை...
பல மாற்றங்கள்
நிகழ்வதும் சத்தியம்...!
உன்னை -
அடிகோடிட்டு
படிக்க....
எனக்குள் -
ஆத்ம தரிசனம்
கொடுத்த...
கலங்கரை -
விளக்கமே....!
உனது -
இலக்கு ஒளிக்கே...!
ஏது...?
உலகில் ஒப்பே...!