சிரித்துவாழ வகைசெய்வோம்

​​ஒண்டுக் குடித்தனமாய்
ஓலைக் குடிசையில்
ஒதுங்கி வாழ்ந்தாலும்
பொங்கி வடித்திடவும்
பொறுமையாய் ஆக்கிட
பொட்டு இடமில்லை
என்பதனால் தாயுமிங்கே
எள்ளளவு ஏக்கத்துளியும்
எட்டிப்பார்க்கா முகமுடன்
குடும்பத்தினர் பசிபோக்க
குலமகளாய் அமர்ந்திட்டு
குலவிளக்கான அன்னை
சமைத்திடும் காட்சியிது !

இடமில்லா ஏழைகளுக்கு
இடஒதுக்கீடு அளிக்காமல்
இதயமிலா இதயங்களோ
வளைத்துப் போடுவதும்
வாங்கிக் குவிப்பதும்
வழக்கமாகிப் போனதிங்கே !
இரக்கம் காட்டிடுங்கள்
இயன்றவரை உதவிடுங்கள்
இறக்கும்வரை இவ்வுலகில் !
ஏழையெனும் சாதியினை
ஏறெடுத்துப் பார்க்காமல்
ஏனிந்தநிலை என்றுநாம்
சிந்தித்து செயல்படுவோம்
சிறப்புறவே வழிவகுப்போம்
சிரித்துவாழ வகைசெய்வோம் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (23-Apr-15, 3:05 pm)
பார்வை : 377

மேலே