வானச் சேலை கசக்கி

மடையான் கூட்டம் பொன்முறுவல் கொத்தை விடாமல் தாங்கி,
வானில் வேகமாய் சீறின...

சிறிதாய்,சிறிதாய் வெட்கி...
பெரிதாய்,பெரிதாய் வானம் அளந்து...

கூட்டமிழக்காமல்,
வாட்டம் படிக்காமல் சென்றது அக்கூட்டம்..

அதில் ஒன்றை கைபிடித்து இழுத்திட்டு,
உங்கள் மிடுக்கு சலித்திட வாய்ப்பிருக்கோ?
என்றே சேதி கேட்டேன்...

சொட்டு பொழுதும் வாய்ப்பில்லை..
சொக்கி கிடப்போம் கனாக்களில்...

என்ற பதிலின் மீது மற்றுமொரு கேள்வியாய்...
என்ன சூத்திரம் கற்றீர் என்றிட்டேன்

வான சேலை கசக்கி
முகர்ந்து பார்ப்போம்...
அதில் மரிகொளுந்தின் மனமேற்போம்...

தேச கோடுகள் கலைந்து
கானுமிடமெல்லாம் எமது வாசலாய் ஏற்போம்.

காதல் மொழிவோம்...
நெகிழ்வுகளை திக்கெல்லாம் தினிப்போம்..

வாய் மீற சிரிப்பதனால் வெறுமை செறித்திடும்..

சிறகு வியர்க்க பறந்தமையால் சோகம் உதிர்ந்திடும் எக்கனமும்

கவலையின் மொழி தெரிந்திருக்கவில்லை...
பின்.............?
வாட்டம் படித்தாலும் புரிவதற்க்கில்லை

எங்கள் உறவுகளில் புரிதல் உண்டென்றமையால்
கூட்டமிழக்காமல் கருவ சேனை வளர்த்தோம்

இவ்வாறெல்லாம் தன் பதில் மடலை எம் செவியுல் நுழைத்து..
கரங்களை மீறி வானை கிடத்தியது அம் மடையான்....

அதன் சிறகுகளை மனிதத்தோடு அர்த்த படுத்தி பார்த்திடுகையில்

உள் நெஞ்சோ சிவந்து, துடித்து..
தன் கொச்சை தாக நிவர்த்திகளை தூவென்று இகழ்ந்தது....

எழுதியவர் : சிவசங்கர்.சி (25-Apr-15, 9:49 am)
சேர்த்தது : சங்கர்சிவகுமார்
பார்வை : 86

மேலே