எது வரை

நாயே..
என்று ..
இளம் வயதில்
தோழனைத் திட்டியதுண்டு..
என்னுடைய நாயின் ..
நன்றி தனை
நான் ..அறியும் வரை!
***********************************************************************************************************
எருமையே..
என்று ..
வழியை மறைப்பவனை
மனதில் கடிந்ததுண்டு..
பொறுமையாய்
பணியினில் நான்
பொறுக்கின்ற நேரம் வரும் வரை!
***********************************************************************************************************
மாடே ..
என்று ..
சிறு வயதில் தங்கையை
விரட்டியதுண்டு..
புகுந்த வீட்டில்
மாடாய் உழைத்தவள்
கொடுமையினால் ..
அவள் மறையும் வரை!
***********************************************************************************************************
மயிரே..
என்று சொன்னால்
தண்டனை உண்டு..
அது கெட்ட வார்த்தை என்று சொல்லி வளர்த்த அப்பாவிடம்..
முடி வெட்டிக் கொண்டு வந்தேன்
என்றுதான் சொல்ல வேண்டும்..
..
அப்படி இருந்தும் கூட..
..இளவயதில் ..ரஜினியைபோல்
வாரி..கோதிக் கலைத்த
அதன் மகிமை புரியவில்லை
எனக்கும் கூட..
பாதிக்குமேல் ..அது..
கொட்டிப் போகும் வரை!
...அதனால்...
மயிரே என்று சொல்வது
இலக்கியத்தில்
இருந்து விட்டு போகட்டும்...!
ஆனாலும் ..
முடிந்தவரை ..
முடி என்று
முடித்து விடல் நன்று..இதுவே
முடிவு அன்று!
***********************************************************************************************************