கண்ணீர்

கண்ணீர்..
பலவீனத்தின் வெளிப்பாடு ..
சிலநேரங்களில் மட்டுமே.... ..
ஆனால்....
கண்ணீர்..
பலம் வாய்ந்தது ..!
எதனையும் மாற்றும்
சக்தி கொண்டது.. !
பலமணிநேரப் பேச்சை விட
வலிமை வாய்ந்தது ..
ஒரு துளி கண்ணீர்..!
***********************************************************************************************************
அது ..
அரசியல்வாதியோ..
அன்பு மனைவியோ..
அருமைக் கணவனோ..
விரும்பிய திருமணம்
நிகழ்ந்த நொடியில்
பெற்றவரைப் பார்த்து
கலங்கும் மகளோ ..
ஒரே..ஒரு துளி...
எத்துனை மகத்தானது..!
மாற்றங்கள் விளைவிப்பது..!

***********************************************************************************************************

வெற்றிக்குப் பின் வரும்
உப்புக் கரிக்கும் கண்ணீர்
உழைப்பினால் வந்த
வியர்வைக்கு ஈடாகும்..!

உதிர்க்கப்படாத வார்த்தைகளை
ஒரு துளி கண்ணீர் ..
எடுத்துரைக்கும்! ..

மனம் வருந்தி ..
வருகின்ற கண்ணீர்
..
எல்லையற்ற ஆனந்தத்தில்
வெளிப்படும் கண்ணீர்..
..
நிறைவானது..மட்டுமல்ல ..
நிம்மதி தருவதும் கூட !

***********************************************************************************************************

கண்ணீர் ..
பிறரை கண் கலங்க
செய்யாமலிருக்க ..
மறைக்க படுவது கூட நல்லதே ..
ஒரு மழையில் நனைபவனின் கண்ணீர்
வெளியில் ..பிறரால்
உணரப்படாமலிருப்பதைப் போல..!
..
என் கண்ணீர்..
விரயமாக்க பட்டிருக்கலாம் ..
வீணர்களால்..
ஆனால்.. எப்போதும் அது ..
சேமிக்கப் பட்டே வருகிறது..
ஆனந்த நிகழ்வுகளுக்கும்..
தவறுகளுக்கு வருந்துவதற்க்கும்..!..

***********************************************************************************************************
.ஆனாலும் ..
ஒரே ஒரு
புன்னகை..என்பதோ..
...
மடை திறந்து
வெளியேறும்
பல லட்சம்
கன அடி நீருக்கு
ஒப்பானது..!
..
கண்ணீரின் விலை... அதிகமானது..!
புன்னகையோ விலை மதிப்பில்லாதது!

..இங்கே

..துன்பங்கள் கூட நிரந்தரம் இல்லை..!
..புன்னகையில்லா நாட்கள்..யாவும்
....................................வாழ்ந்த நாட்களே இல்லை !

***********************************************************************************************************
பி.கு.: தளத்தின் நண்பர் G .ராஜன் அவர்கள் தெரிவித்திருந்த ஒரு தகவலின் படி , சார்லி சாப்ளின் தனது கண்ணீரை மழையில் மறைப்பது பற்றியும்..துன்பங்கள் கூட நிரந்தரமில்லாதவை என்று சொல்லிய வாக்கியங்களின் அடிப்படையில் எழுந்த வரிகள் இவை!

எழுதியவர் : கருணா (28-Apr-15, 4:59 pm)
Tanglish : kanneer
பார்வை : 827

மேலே