புதுவைக் குயில் - புரட்சிக் கவி

இன்று 125 வது பிறந்தநாள் காணும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்...அவர்கள் புகழ் போற்றும் ஒரு கவி.. !
*****************************************************************************

ஆயுதந்தான் ஏந்திற்றா ? தீந்தமிழால் தீண்டிற்றா ?

ஓயுதல்தான் ஏதுமின்றி குடும்ப விளக்கதுவும்

ஓரிரவில் தோன்றிற்றா? தமிழ்ப் புதுவை

பாரதியின் தாசனென புரட்சிக் கவி பிறந்ததுவோ?

******************************************************************************

உன்றன் குயில்பாட்டும் அழகின் சிரிப்பெல்லாம்

என்றன் மனந்தொட்டு எளிதில் புகுந்ததனால்

பாரதி தாசனாரவர் பாண்டியன் பரிசொன்று

பாரது பெற்றதென பணிந்தேன் பாதம் !

***************************************************************************
இன்று உன்னால்...

*************************************************************************

நிறைவைக் கண்டேன் தமிழில் - வளம்

நிறையக் கண்டேன் அதனில் !

ஒளியைக் கண்டேன் உணர்வில் - மனம்

தெளியக் கண்டேன் என்னில் !


***************************************************************************

அமிழக் கண்டேன் என்னைக் - கவி

படியக் கண்டேன் தினமே !

புரியக் கண்டேன் புவியும் - பணி

சிறக்கக் கண்டேன் தமிழே !

***************************************************************************

எழுதியவர் : கருணா (29-Apr-15, 9:45 am)
பார்வை : 459

மேலே