என் கனவு காதல்
அந்திவானம் பொன்மாலைபொழுது
அணைக்க நீ வருவாய் என..
அழகாய் காதலை சொன்ன
கவிஞர்களின் வரிகளில்
மிதந்துக் கொண்டிருந்தேன்.....
அந்த அந்திவானிலே
அழகான பறவைகள் கூட்டம்
பாட்டுக்கள் இசைத்துக் கொண்டே வீடுதிரும்பியது...
கதிரவனும் களைத்து மறைந்துவிட்டான்...
என் கவிஞர்களின் காதல் வரிகளும் களைத்துவிட்டன....
காதலி நீயோ வரவில்லை...
நிலவு வரத் தயாராக இருந்தது...
சில நிமிடங்களில் நிலவும் வந்தது....
உட்கார்ந்திருந்த நான்
நீ தான் வந்துவிட்டாய் என எழுந்துவிட்டேன்....
ஏமாற்றத்தில் ஏங்கி போனேன்...
இன்றும் நீ என்னை தனிமையை
ரசிக்க வைத்துவிட்டாயே என்று
உன் மீது சிறு கோபத்துடன்
வீடு வந்து சேர்ந்தேன்....
உன்னை வெறுக்க இப்படி செய்கிறாயா
இல்லை நிஜமாகவே என்னை வெறுக்கிறாயா...
உன் நினைவுகளால் உன்னால்
சாப்பிடாமல் உறங்கினேன்....
.
.
.
.
.
.
.
.
.
காலையில் யாரோ தட்டி எழுப்பினார்கள்...
அம்மா....
அப்போது தான் தெரிந்தது அது கனவென்று
கனவிலும் என் கை பிடிக்கமாட்டாயா