மரம் வடிக்கும் கண்ணீர் கவிதைகளாய்

முளைக்கும் முன் தானிய உணவாக
முளைத்த பின்னும் ஆட்டிற்கு விருந்தாக

அதையும்மீறி வளர்ந்தோம் கிளைகளாக
அப்போதும் ஓடிக்கின்றீர் விறகுகளாக

ஓடிந்ததுபோக வளர்ந்தோம் மரமாக
ஓராயிரம் பூவாய் மலர்ந்தோம் அழகாக

கனிகளாய் உதவத்தான் காத்திருந்தோம் - அதற்குள்
காயாய் பிஞ்சாய் உங்களுக்கு மருந்தாக

பதர்போக கணிந்தோம் பழமாக
பட்சிகளும் நீங்களும் வயீறாற

இப்போதும் வாழ்கிறோம்
அடியோடு அறுத்து வேரோடு சாய்க்கும்வரை

வீட்டினுள் கூரையாய் தாங்கினேன்
வீணையாய் ஊஞ்சலாய் மாறினேன்

எரிக்கப்படுகிறேன் கரிக்கட்டையாய்
என்னென்ன தேவைகளுக்காகவோ

கரியையும் விட்டுவிட மனம்மில்லை உங்களுக்கு
கட்டாயம் ஆக்கினீர் சாம்பலாய்
இன்னமும் தேய்கின்றீர் பற்களில்
பற்கள் வெளுக்கும்வரையல்ல உங்கள் உள்ளம் வெளுக்கும்வரை

ஆனாலும் மகிழ்ச்சிதான் எங்களுக்கு
சிலர் சாம்பலையும் திருநீறாய் பூசுவதால்..!!

எழுதியவர் : janagar jana (4-May-15, 10:29 am)
பார்வை : 68

மேலே