நட்பு
![](https://eluthu.com/images/loading.gif)
எத்தனையோ உறவுகள் இருந்தும்
அத்தனை உறவும் அழகாய் சேர்ந்து
அரவணைக்கும் அன்னையாய்
அறிவுரைக்கும் தந்தையாய்
செல்லச்சண்டையிடும் தங்கையாய்
செலவழிக்கும் அண்ணனாய்
தலைசாய்க்கும் தலையணையாய்
உணர்வுகளை நேசிக்கும் உறவாய்
தோல்வியின் போது தோள்கொடுத்து
தடம் மாறும்போது தடைசெய்து
தலைவணங்கும் தலையாய உறவே
நட்பு ......