தொலைந்து போன சொந்தங்கள்

கந்தல் துணியாய்
கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது
கடந்த காலத்தின் எச்சங்கள் ...

கண் முன்னே உணவிருந்தும்
எடுத்து உண்ண இயலா நிலைபோல்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
இறைந்து கிடக்கின்றன அன்பின் நேசங்கள் ...

தொலைதூர சொந்தங்கள் எல்லாம்
எதையோ தொலைத்து விட்டது போல்
தூர நின்றே வேடிக்கை பார்க்கின்றன ...

கண்களில் சுழலும் கண்ணீர்த் துளிபோல்
இன்னும் சிலரின் நினைவுகள்
என்னை விட்டகலாமல்
வினாக்கள் தொடுக்கின்றன ,,,

அன்பின் வடுக்கள் இங்கு
ஏராளம் ஏராளம் ..
மரத்தின் கணுக்கள் போல்
அவை பெருகிக் கிடக்கின்றன ...

மாற்றம் ஒன்றுதான் மாறாதது - என்று
யார் சொன்ன கூற்றோ ?
அது கூட மாறிப் போனது
என் வாழ்வில் ...

எழுதியவர் : தமிழன்பன் என்றும் புதியவ (8-May-15, 9:15 am)
பார்வை : 141

மேலே