தோழர் தாகு தாக்கு

அந்த அலை அலைந்தது
கடல் கூடவே
மணற் பரப்பில் அமைதி

பாய்மரக்கப்பல் அசைந்து
ஆடியது
கடல் கூடவே
வானத்தில் ஆட்டம்
பறவைகள் அலைந்து ஆடின

படகின் மனிதர்கள் ஜடமாய்
மனசெல்லாம் அலைந்தும் ஆடியும்

காற்று இப்போது பறக்கிறது
பறவைகள் மனித ஆட்டம்
கடல் அமைதியில்

மனிதமனங்கள் அசைந்தாடி
அலைகின்றன
மனிதர்கள் போலவே .....

எழுதியவர் : அகன் (11-May-15, 8:36 am)
பார்வை : 103

மேலே