காவியமானவள்-பகுதி7

மணாளன் மாணாளள் எனை கை சேரும் காலம் முக்கனிதனின் சுவைதனை தாங்கி கனிந்து ததும்பும் என் இதழ் ருசிக்க அனுமதிதராமல் போவேனோ??என இன்முகத்தோடு தமிழினி பதிலுரைக்க மகிழ்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான் ஆனந்த்...இந்த உலகம் இந்த வான் இவை அனைத்தும் எனக்காக படைக்கப்பட்டதுவோ??
தமிழ் உன் கைசேரும் நாளுக்காய் காத்திருப்பேன் இன்று என் வாழ்வில் மறக்க முடியா நாள்... மரணம் வரை நீ என்னோடு கை கோர்த்து வர வேண்டும் உன் விரல் நுனி என் கைவிரல் பிரியும் நொடி எனை மரணம் தழுவ வேண்டும் என தன்னையே மறந்து காதலில் மூழ்கி தமிழிடம் ரொமான்ஸ் மழை பொழிந்தான் ஆனந்த்...
நிச்சயமா ஆனந்த் என ஒரே வார்த்தையில் தொடர் புள்ளி வைத்தார்ப்போல் முடித்துக்கொண்டாள் தமிழ்...
காதலில் தனக்கான எல்லையை வகுத்துக்கொண்டனர் இருவரும்...தனது படிப்பு முடியும் வரை தமக்குள் எந்த ஒரு ஊடலும் இல்லை வெளியில் சந்தித்து பேசினாலும் நமக்குள்ளான சந்திப்பு சில நிமிடம் மட்டுமே நீடிக்க வேண்டுமென தமிழ் சொல்ல அனைத்து விதிகளுக்கும் உடன்படுவதாய் உறுதியளித்தான் ஆனந்த்...சூரியன் நடுவான் வந்தாடன் மதியம் ஒன்றென்று காட்டியது கடிகாரம்...சரி தமிழ் வந்து நீண்ட நேரம் ஆகிறது அம்மா எங்க போனனு திட்டுவாங்க போய்ட்டு வரேன் நாளைக்கு கல்லூரி கிளம்பும் முன் வந்துவிட்டு செல்கிறேன் என விடைபெற்று முற்ப்பட்டான் வெளியேற...
இருடா நானும் வரேன் நம்ப வீட்டுக்கு என உரிமையோடு கேட்க ஆனந்தும் சரி வா என வீட்டின் வாயிற்கதவை பூட்டி இருவரும் நடக்கத்துவங்கினர்...
அந்த மொட்டை வெயிலையும் பொருட்படுத்தாமல்...
இருபுறமும் புளிய மரமும்,வேம்பு மரமும் காதல் ஜோடிகளை வரவேற்க்க புளியம்பூக்கள் உதிரின இருவரின் தலையில் அட்சதை பூக்களாய்...மௌனமாக சிரித்தாள் தமிழ் உள்ளுக்குள் எதையோ நினைத்து...
என்ன தமிழ் ஏன் சிரிக்கிற...
உனக்கு நியாபகம் இருக்கா ஆனந்த்...
நம்ம சின்ன வயசுல சேர்ந்து விளையாடுவோம்ல
அப்ப ஒருநாள் நான் புளியம்பலம் கேட்டேன் நீயும் பறிச்சு தரதா வீராப்பா மேல ஏறி கீழ விழுந்து கைல சிறாய்ப்போடு வந்தயே நான் கூட மருந்து போட்டு விட்டனே அத நினைச்சேன் சிரிச்சேன்...
அந்த நாளே உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சுடா எனக்காக மரமே ஏறத்தெரியாம ஏறி கீழ விழுந்தயே எனக்காக வாழ்க்கைல நீ என்னலாம் செய்வ...
கண்டிப்பா டீ உனக்காக எது வேனுனாலும் செய்வேன்...
என்ன ஆனந்த் சொன்ன டீ யா??
நீ தான் சொன்னயா?
நீ தமிழ்னு சொல்ரதவிட இப்டி கூப்டறது ரொம்ப பிடிச்சிருக்கு ஆனந்த்...
இப்படியே பேசிக்கொண்டு வீட்டை அடைந்தனர் இருவரும்...
மதிய உணவு சமைத்து அப்பளம் பொறித்துக்கொண்டிருந்தாள் ஆனந்த் அம்மா...
கதவை தட்டுவதை கேட்டு அடுப்பை குறைத்து எறியச்செய்து கதவை திறந்தாள் இருவரும் நின்று கொண்டிருந்தனர்...
வா தமிழினி என்ன அதிசயமா இருக்கு இரண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கிங்க...காலைல இருந்து அங்க தான் இருந்தானா இவன்?
என கேல்வி கனைகளை அடுக்கினாள் ஆனந்த் அம்மா...
ஆமா,ஆன்டி பத்து மனிக்கு வந்தான் கதை புத்தகம் படிச்சிட்டு இருந்தோம் நேரம் போனதே தெரியல என கதை அளந்தாள் தமிழ்...
என்ன புள்ளைங்கடா நீங்க
கத படிக்க ஆரம்பிச்சா
சாப்பாடு கூட இல்லாம படிப்பிங்க...என பேசுயதை நம்பி பதிலுரைத்தாள் ஆனந்த் அம்மா...
சரிமா என்ன சாப்பாடு தமிழும் இன்னைக்கு இங்க தான் சாப்ட போறா...செஞ்சுட்டயா சொல்ல ஆனந்த் கேட்க
இல்லடா,காலைலயே சமச்சுட்டேன் சாப்டலனா வீனாகிடும் நான் போய் சாப்டுக்றேன் என மறுத்தாள் தமிழ்,
அதெல்லாம் எனக்கு தெரியாது
இன்னைக்கு எங்க கூடதான் சாப்டர என கண்டிப்போடு கூற ஒப்புக்கொண்டாள் தமிழ்...
சாதம்,பொறியல்,அப்பளம்,மெதுவடை என தட்டை நிரப்பி இருவருக்கும் கொண்டு வந்து கொடுத்தாள்
ஆனந்த் அன்னையும் உனவை எடுத்திக்கொணர்ந்து சேர்ந்தே சாப்பிட தண்ணீர் எடுக்க சமையலரை சென்றால் ஆனந்ந் அன்னை...
தட்டுகள் இடம் பெயர்ந்தன
பட்டமாற்று முறை இதிலும் சாத்தியமானது...தமிழ் உண்ட மீதியை ஆனந்த் உண்ண,ஆனந்தின் உணவை சுவைத்தாள் தமிழ்...
சமையலரை சென்றிருந்தவள் தண்ணீர் எடுத்துக்கொண்டு இருவரின் அருகில் வந்தமர்ந்தாள்...
இருவரையும் பார்க்கையில் தெரிந்து விட்டது அவர்களின் பண்டபரிமாற்றம்...
என்ன நடந்திருக்கும்...?
கண்டித்திருப்பாளா ஆனந்தின் அம்மா???
-காவியமாவாள்

எழுதியவர் : கிருபானந்த் (12-May-15, 9:51 pm)
பார்வை : 329

மேலே