எனக்கு கிடைத்த வரம்
மழை துளியாய் ..............
மண்ணில் விழுந்தேன் மரகதம் ஆனேன் !
மலையில் விழுந்தேன் மாணிக்கம் ஆனேன் !
கடலில் விழுந்தேன் முத்து ஆனேன் !
கரையில் விழுந்தேன் கல் ஆனேன் !
பிறகு பாறையில் விழுந்தேன் பவளம் ஆனேன் !
இறுதியாய் என் இறைவன் அவர் அள்ளி தந்த வரத்தால் .....
என் தாயின் வயிற்றில் கருவாய் விழுந்தேன் - இந்த
பூமியில் அவளுக்கு மகளாய் மலர்ந்தேன் ...........