என் முச்செல்வங்களே
முத்தாய் பிறந்தேன் மூன்றாம் பிள்ளையாய்
மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்தேன்
முப்பிறவியில் செய்த பாவமோ
மூன்றே வருடத்தில் தாலி இழந்தேன்
முடிந்த வரை படிக்க வைத்தேன்
முயலாத வயதில் முச்சந்தியில் நிறுத்திவிட்டாய்
முந்தானையை குடையாக பயன்படுத்தவும் பழக்கிவிட்டாய்
முகம் தெரியாதவரிடம் கை நீட்டவும் செய்துவிட்டாய்
முத்தாய் பிறந்த என் முச்செல்வங்களே ...................!