எப்பொருளில் எழுதுகிறாய் - தேன்மொழியன்

எப்பொருளில் எழுதுகிறாய்
~~~~~~~~~~~~~~~~~~~~~
புரியா கவிதையொன்றில்
எத்தனை வரிகளை ...நான்
உள்வாங்கி உணரனும் ...
தெளிவான கட்டுரையில்
தெரிந்திடா நடைகளை ..யார்
பின்தொடர முயலனும் ..
நிறைவில்லா கதைக்குள்
கட்டற்ற கருக்களும் ...ஏன்
கையேந்தி நிற்கணும் ..?
எழுதியதன் பொருள்
எதுவென்றாலும் ...
புரிதலின் பயனிங்கே
பிழையென நீள்கிறது ...
அலைவரிசை அம்சமாய் ...
வசதியான வாசித்தலில்
விருப்பமிலா விழிகள்
விளங்காமல் வெறுக்கிறது
வற்றிய ரசனையோடு ..
அடிக்கடி அயர்ந்து
ஆறடி உயர்ந்து ....
சிந்தனை சிதறாத
வரிகளின் வல்லமை ..
பின்னூட்டம் சார்ந்ததென
பிறர் மனம் அறியுமா ..?
- தேன்மொழியன்