மூலம் ஆழி விரைந்தாள்

அந்தி மாலை நேரம்
பூமி மகளின் ஈரம்
வடிந்தோடும் நீரின் வதனம்
நாணம்கொண்டு சிவந்து
மலைச் சாரல் ஊடே மறையும்

இரவின் மடியின் சிறையில்
சல சலத்தே கரைந்து
சலனம் காட்டி வெண்ணுரையை
பூவாய் தூவி இரைந்து
மூலம் ஆழி விரைந்தாள்

ஏங்கும் பூமி பிரிந்து
ஏவல் இறைவன் பணிந்து
தரணி எங்கும் வளைந்து
தடவி த் தடவி சிரித்து
களித்தே கழிந்தே செல்வாள்!!

எழுதியவர் : ஜவ்ஹர் (13-May-15, 5:08 pm)
சேர்த்தது : ஜவ்ஹர்
பார்வை : 104

மேலே