சில நிகழ்வுகளின் போது

இலையுதிர்காலம்..
எறும்புகள் இங்குமங்கும் பரபரப்பாய்
வெள்ளம் நெருங்கிக் கொண்டிருக்கிறது!

*********************************************************
அடைமழை பொழிகிறது..
குளிர் காற்றின் நடுவே
கோபமாய் குலைக்கிறது நாய்!

********************************************************

விடியல் நேரம் ..
பூக்களும் எழுந்து கொள்கின்றன
ஆதவனைக் காணவில்லை !

********************************************************

எழுதியவர் : கருணா (14-May-15, 9:07 am)
பார்வை : 174

மேலே