தாகத்தீரன்
தீரா தாகத்தீரா
தாரன் நீயாய்
தூரு தீயாய்
ஓடு புயலாய்
தேடல் நாவாய்
தினம் ஏறி பறப்பாய்
காட்டில் விழுந்தாலும்
காட்டை விழுங்குவாய்
காற்றை கடிந்து
அதின் போக்கை சொல்லுவாய்
ஆற்றை பிளந்து
அடுப்பில் ஏற்றுவாய்
ஆதவன் ஊற்றி
தோல்வி அடித்து
தினம் வெற்றி சமைப்பாய்
தானாய் விழும்
எனக் கண்டால்
தாண்டிப் போவாய்
தூண்டில் தேடாய்
வலையாய் விரிவாய்
மோதும் அலைகள்
ஏதும் செய்வாய்
போதும் என்று
எப்போதும் சொல்லாய்
வில்லாய் பதுங்குவாய்
அம்பாய் மீறுவாய்
ஊரைக் குடிக்க
ஊதிப் பெருகுவாய்
பேரைக் கெடுக்காமல்
மோதிப் பழகுவாய்
தீக்குள் நின்று கொண்டு
பூக்கள் விதைப்பாய்
காவு வாங்கும்
எனத் தெரிந்தும்
தாவிப் போவாய்
சாவில் பிறப்பாய்
சாவி திறப்பாய்
சாகசம் சிலிர்ப்பாய்
ஆவேசத்தில் சிரிப்பாய்
வாரினால் இழுக்கா
குதிரையாய்
வாஞ்சை கொள்
வியாக்கியானம் செய்ய
விஞ்ஞானம் புகு
அஞ்ஞானம் விடு
மெய்ஞானம் தொடு
உன் ஞானம் உன்னுள்ளே
அதை தோண்டு
வேண்டும் வரம்
நல்கும் கடவுளாய்
உன்னை கண்டெடு
கயவர் நடக்கும் கயநாட்டுள்
நீதி வென்ற நாடனாய் சிறந்து
புத்தி தெளிந்து நெறியுடை மனத்தால்
தீதில் கொள்கை அறுத்தார் நோக்கி
மருங்கி வாழ முயன்றார் நெருங்கி
செம்மை சால் நட்பு நாடியே
உண்மையின் பால் நிற்க ..!
----------------------------------------------------------------------------
குறிப்பு : தாரன் - மாலை அணிந்த தலைவன்