எது புரிதல்
படியிலமர்ந்து
பழம் தின்றுகொண்டிருந்தான்
அச்சிறுவன்....
அவனருகில் குருவியொன்று வந்தது
அதற்கு கொஞ்சமளித்தான்
இன்னொரு குருவி வந்தது
இன்னும் கொஞ்சமளித்தான்
மறுபடியுமொரு குருவி வந்தது
மறுக்காது அதற்குமளித்தான்
வீட்டிற்குள்ளிருந்து
உனக்குத் தந்ததை
தெருவில் ஏனடா வீசுகிறாய்
என்றபடி வந்தார் அப்பா...
அக்குரல் கேட்டபின்பும்
அசையாதிருந்தான்
அவன்...
ஆனால்
அக்குருவிகள் மூன்றும்
அவனைப் பார்த்தபின்..
அவசர அவசரமாகப் பறந்திற்று....!!
------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்