சமுத்திர பார்வை
பெண்ணே
நீ என்னை பார்க்காத நாட்களில்
உன்னை என் நட்பாக்கி கொள்ள நினைத்தேன்!
முதலில் என்னுள்
நடந்தது நட்பு போராட்டம்தான் .........
அது
'காதல்' போராட்டம் ஆனது எபோது ?
நம் சுதந்திர நட்பில் 'காதல்'
சிறகுகள் முளைவிட்டன.............
உன் சாதாரண பார்வை
சமுத்திரமாக தெரிந்தது!
உன் மவுனம்
என்னை தனிமைபடுத்தியது........
என் ஒரு நாள் பிரிவு
உன் வார்த்தைகளின் வீழ்ச்சிகளாயின...........
இந்த மாற்றம்தான் - நம்
காதலின் போராட்டம் ...................
என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்