இது கலிகாலம் - ப்ரியன்
மானம் கெட்டவர்க்கே மரியாதை அதிகம்:
இது கலிகாலம் - ப்ரியன்
---------------------------
மானம் கெட்டவர்க்கே
மரியாதை அதிகம்
மனச்சாட்சி கொன்றவர்க்கே
பொருட்ச்செல்வம் குவியும்
---------------------------
தானம் இடாதவர்க்கே
தனமிங்கு அதிகம்
தன்னலம் பேணுபவர்க்கே
தலைவர்பதவி குவியும்
---------------------------
ஆணவம் கொண்டவர்க்கே
அடிபணிவர் அதிகம்
அன்பை வைப்பவர்க்கே
இழப்பனைத்தும் குவியும்
---------------------------
நல்லது நினைப்பவர்க்கே
நலிவு இங்கு அதிகம்
நரிவேலை செய்பவர்க்கே
நாலும் கைகூடும்
---------------------------