துக்கம்

தூக்கம் தொலைத்த என் இரவுகள்,
துக்கம் மறைக்கும் அசட்டுச் சிரிப்புகள்,
துரத்திக்கொத்தும் உன் நினைவுகள்,
நினைவுகள் உறுத்தும் உறவுகள்,
நட்பு எல்லைக்குள் இருந்திருக்கலாமோ!
நட்புடன் கொண்ட பொழுது,
எவ்வளவு இனிமையானதாய் கழிந்தது.
வரம்புகளை மீற வைத்து,வலிகளையே
விருந்து வைத்திருக்கிறது காதல்.

எழுதியவர் : jujuma (7-May-11, 8:57 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 398

மேலே