அனுபவங்களின் அறிவுரைகள் - 12222

அனைவரும் நம் நலனுக்காய் - அவர்தம்
அறிவுரைகள் நமை நெறிப் படுத்தும்
காது கொடுத்துக் கேட்போம் - நம்
கஷ்டங்கள் யாவும் தீரும்......!!
எனக்கு எல்லாம் தெரியும் - நீ
எடுத்துரைக்க ஒன்னும் இல்லை
என்ற எண்ணம் இனி விடுவோம் - நாம்
எல்லோர் மனதிலும் இடம் பிடிப்போம்....
குழிக்குள் நமைத் தள்ள எவருமில்லை - நம்
குறையுள்ள மனதை தவிர - எனவே
குற்றம் கண்டுபிடித்து நகைப்பதை விடுத்து
குறிக்கோளை அடைய வழி சொல்லிக் கொடுப்போம்....
ஆகவே தோழமைகளே......
அனைவருமே நம் நலனுக்காய் - அவர்தம்
அறிவுரைகள் நமை நெறிப் படுத்தும்......!!