என்ன தலைப்பு வைப்பது என்றே தெரியவில்லை

சலங்கை ஒலியோ
சங்கீத ஸ்வரூபமோ
கேட்க முடியாத நேரமோ - நான்
பாட முடியாத காலமோ ...........

வாசம் வீசும் தென்றலும்
வசப்பட்டிடுமோ - வானவில்
போல என் மனதும் வண்ணமையம் ஆகிடுமோ ..........

ஈசனே உன் மனம் வெள்ளையோ - என்
மனம் உண்மையோ - நான்
நினைப்பது நடந்திடுமோ ............

காலம் என் கைக்கூடிடுமோ - நானும்
கரை சேர்ந்திடுவேனோ - இல்லை
தேய்நிலவை தேன் - போல்
தேக்கரண்டியில் எடுத்து சிந்தியது - போல்
ஆகி என் ஆசை தவறிடுமோ ................

தேய்பிறையும் வளர்பிறை ஆவது - போல்
என் இருள் வாழ்விலும் ஒரு நாள் ஒளி வீசிடதோ ........

என் மனமும் மகிழ்ச்சி அடையாதோ - என்
வீட்டு முற்றத்தில் ஒரு நாள் தென்றல் வாசம் வீசாதோ ..........?

எழுதியவர் : ர.கீர்த்தனா (29-May-15, 3:51 pm)
பார்வை : 259

மேலே