பர்மிய பூர்வீகம்
ஆத்மீகமென உரைத்து
சாத்வீகமது மறந்து
தார்மீகமதனை இழந்து
போர்வியூகம் வகுத்து
பூர்வீக பர்மிய முஸ்லிம் இனமதை
கொழுத்துவதை நிறுத்து
காவியுடை புனைந்து
கடைத்தெருவில் தரித்து
நடையில் வரும் முஸ்லிமை மறித்து
உயிரோடு எரித்து
செய்யும் ஆர்ப்பரிப்பை நிறுத்து
பதினேழு ஆண்டுகளாய்
பதியும் பதிவேடு அதில்
பல செங்குருதிக்கோடு
வீடு மாடு நாடு
இழந்து காடு வழியே
ஆழிக்குள் தோணி இருக்க
தோணிக்குள் ஆழி இருக்க
அவ்வாழிக்குள் எம்மவர் இருக்க
மரண பயணம் இரணமின்றி
பயத்துடன் துவங்க
ஆடிப்பாடி ஓடிவிளையாடி
கூடிக்குலவி மகிழ்ந்த
தருணம் முகிழ்ந்து
பர்மிய பௌத்தரெல்லாம்
எம்மவரை இகழ்ந்து
வெளியேறு புகலிடம் இங்கில்லை
சவக்கிடங்கே இங்குண்டு
கண்டு களிக்க
உண்டு மகிழ
இங்கிடமிராது
கொன்று மகிழ
இங்கு அசின் விராது
நிறைமாத மங்கை கொங்கை
அறுத்து கற்பழித்து கருவறுத்து
வெளியில் சிசுவெடுத்து
சிறுநீர் புகட்டும்
நரமாமிசம் உண்ணும் நாய்களே!
சென்ற நோன்பு பலஸ்தீன்
அதன்முன் நோன்பு எகிப்து
வரும் இந்நோன்பு பர்மா
சோனகன் என்றால்
என்ன ஏளணமோ!
எதிர்த்து கேட்க எவன்
உள்ளான் எனும் ஆணவமோ!
எதிர்த்து கேட்க எவருமில்லைதான்
எதிர்த்து போரிட ஏகன் துணை
எமக்குண்டு
கோடரியும்,மண்வெட்டியும்,
சம்மட்டியும்,பாக்குவெட்டியும்
கொண்டு வந்தால்
எம்மை கொல்ல யாமே
சம்மதிப்போம் என எண்ணினீரோ!
நீராய் ஓடும் நதியும்
நேராய் வீசும் காற்றும்
போராய் முழங்கும் இடியும்
உம்மீது இறங்கும்
அரிவைகளை அரிவாளால் அரிவதை
அறிவோம்
உம்சூட்சுமம் யாம் அறி வோம்
உமக்கென்ன? தக்கபதில் யாம் தருவோம்
ஓடெடுத்து கீழ் போட்டுடைத்து
செல்லக்கிளி கூடுடைத்து
மாடடைத்து வீடடைத்து
பூர்வீக பர்மியர் வாயடைத்து
அவர் கையுடைத்து காலுடைத்து
முதுகென்பு உடைத்து
சாதித்துவிட்டீர் என எண்ணாதீர்
எம் பொறுமைதனை சோதித்து விட்டீர்
நபிகள் போதித்த பொறுமைதனை
சோதித்து விட்டீர்,எம்மை
கோபித்து விட்டீர்
இறைவன் உம்மை சபித்துவிட்டான்
தீனுணர்ந்தவரை தீயிலிட்டு
தீக்கிரையாக்கின தீயவரே
நீரும் தீயில் தீயும் தருணம்
தீயாய் வந்து தீரும்
தீர்ந்து தூர்ந்து போவீரே!
இம்மி இம்மியாய்
விம்மி விம்மி தாயழ
அம்மி அதில் அன்னை
முன்னே பச்சிளம் பாலகனை
தப்பி தப்பி அறைந்து துவைத்தீரே!
உமக்கு பிறவிகளே இல்லையோ?
உமக்கு விந்து சுரப்பதில்யோ?
சிசுக்கள் பிறப்பதில்லையோ?
பசுக்கள் இறப்பதில்லையோ?
நீரும் மனிதர்தானே?
மனிதர் எனச்செப்பும்
மதவெறி மிருகமா?
புரியவில்லை தெரியவில்லை
உம்முள்ளம் இது கண்டு
எரியவில்லையே!
ஆத்திர அவசரத்திற்கும்
அயலவருடன்
அண்ணன் தம்பியாய்
பழகியதே கிடையாதா?
மக்களோடு புழங்கியதும்
கிடையாதோ?
ஆண்டவனே!மாண்டவரை
சுவன மனை நுழைவி
இயன்றவரை கொண்டு
காடையரை அழிவி.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
