சொர்க்கத்தில் நிச்சியம்

இது சொர்க்கத்தில்
நிட்சியிக்கபட்டது !

ஆம்
கனவில் கூட உன்
முகம் காணவில்லை!
ஆனால் 'கற்பனையில்'
நீ இருந்தாய் ........

உன் உருவத்தை
என்னால் வரையமுடியவில்லை!
ஆனால் என்
உணர்வினை தூண்டுபவளாக இருந்தாய்.........

பல படிகள் ஏறின
என் பாதங்கள் பாவை உனைக்கான,
முகங்கள் பதியவில்லை
என் மனதில் - ஆனால் நீ
எனக்காக பிறந்து விட்டாய்
என்பது மட்டும் தெரிந்தது ..............

காதலி என்றால்
கண்கள் உடனே தேர்ந்தெடுத்து விடும்,
மனைவி என்பதால் அங்கே
மனம் தான் தீர்மாணிக் வேண்டும்..........

நாட்கள் கடந்தன..
நாளிதழிலும் வெளியிட்டேன்
நங்கை வேண்டுமென.......

குலதெய்வ வழிபாடு
குணமாக நீ வரவேண்டுமென,
குடுமபத்தில் நீ ஒருத்தி
சேர்ந்துவிட்டால் மன நிம்மதி........

கனவுகள் மெய்பட்டன,
கடவுளும் கண் திறந்தார்,
காட்சிக்குள் நீ வந்துவிட்டாய்..
என் உணர்வுக்கேற்ற உருவமாய் ............

நாள் குறிக்கப்பட்டு,
தாம்பூலம் மாற்றப்பட்டு,
தாலி கட்டி என் ' மனைவி' ஆனாய்,
நான் தரணியை வென்றவன் ஆனேன்!

உதிரம் சொந்தமில்லை,
என் உணர்வுகளை பங்கிட்டாய்!
நான் சோர்வடையும் போதெல்லாம்
உன் முக சுடரால்
என்னை பொலிவூட்டினாய்!

வாழ்கை என்ற சொல்லில்
'கை' என்பது நீ தான் !
நீ இல்லை என்றால்
வாழ்வில் அர்த்தம் இல்லை
என்பது எனக்கு புரிகிறது.............

என்
சொந்தங்கள் உன்னை
விலக்கும் போதெல்லாம்
'சூழ்நிலை' என்ற சூட்சமம்
அறிந்து என் மனம் போல் வாழ்ந்தாய்........

போராட்டங்கள் பல இருந்தாலும்
வற்றாத நீரோட்டம் போல
'வாரிசு' ஒன்றையும் பெற்றெடுத்து
அன்னை ஆனாய் - எல்லாருக்கும்
அன்பு ஆனாய்..........

நீ அன்னை ஆன பின்பு
என்னுள் ஆன்மிகமும் வளர்ந்தது!
உன் வரவால் பல
'ஆச்சரியங்கள்' என்னுள்

ஆம்
'திருமணம்' சொர்கத்தில்தான்
நிட்சியிக்கபடுகிறது..............

என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்

எழுதியவர் : (1-Jun-15, 1:43 pm)
சேர்த்தது : மனிமுருகன்
Tanglish : sorgathil nichaiyam
பார்வை : 77

மேலே