பிறந்த நாள் வாழ்த்துக்கள் முகில் அண்ணா

88888888888888888888888888888
உள்ளம்தனில் உயிரான உணர்வே
தமையன்னெனும் தாய்க் கவியே-என்
முப்பொழுதும் இனித்திடவே -உன்
கவிப்பொழுது கண் விழிகின்றதே

வானோடு நான் வரைந்த வானவில்லும்
என்னோடு உறைந்த உன் பாசத்தினைப் போல
மண்ணோடு வீழாமல் விண் முகிலோடு
மனம் நிறைந்த வர்ணம் ஆகின்றதே

பூவினில் வாழும் வண்டினைப் போல
உன் மனதினில் வாழும்
தங்கை இவள் நேசம் தனை
ஆள்வதும் உன் மனமென்றே

கடலோடு ஒதுங்கும் துளியினைப் போல
மணம் வீசும் நிலத்தை விட்டு
நிலவாக கூட வருகிறேனே
தமிழெனும் தாய்வயிற்றில்
நிலையான உன் உறவைப் பிடித்து

என்றும் நலமாக வாழ என் அன்பு வாழ்த்துக்கள் முகில் அண்ணா

எழுதியவர் : கீர்த்தனா (1-Jun-15, 7:22 pm)
பார்வை : 1686

மேலே