உன் பார்வையில்…. நானே!

பார்வை பரிமாற்ற்ங்கள்,
தீ பொறியாய்…..
பேருந்தில், சிறு பார்வைகள்…
மின்னி மறையும் மின்னல் கீற்றாய்…
சிற்றுண்டிச் சாலையில் ஒரக் கண்
பார்வைகள் மனதினுள் பரவசமாய்…..
ஆனால், உன் பார்வைகள்….
இதில் எதிலுமே சேராமற் போன
பாதரசமாய்….
ஆதலால் தான், நானும் உன் பார்வை
பட்டவுடன், எதிலுமே ஒட்டாமல் திரிகிறேன்

எழுதியவர் : தமிழன் (9-May-11, 2:13 pm)
சேர்த்தது : இசைத்தென்றல்
பார்வை : 350

மேலே