என்னவனே - சகி

என்னவனே !

உரிமையுடன் கண்டிக்கும் உன்
உறவு வேண்டும் அன்பாக ...

அன்பான கோபம் கொண்ட
உன் உறவு வேண்டும்
என்னை என்றுமே அரவணைக்க ...

ஆதரவாக நான் தோள் சாய
உன் காதல் நட்பாக வேண்டும் ...

உன் உண்மையான அரவணைப்பு
வேண்டும் என் ஆயுள்வரை ....

உ(எ)ன்மீது நம்பிக்கையான காதல்
வேண்டும் நம் சுவாசத்தின்
இறுதிவரை ....

உண்மையான காதல்
வேண்டும் என் உயிரில்
கலந்த உயிரான உறவாய்...

என் விழிகளின்
கண்ணீர்த்துளிகளுக்கு
சொந்தமாய் நீ வேண்டும் ....

என் கண்ணீர்த்துளிகளை
ஏந்தும் கரமாக உன்
காதல் வேண்டும் என்றுமே ....

மரணம் என்னை
தழுவும் நேரம்
உன் மடிசாய வேண்டும் ...

எழுதியவர் : சகிமுதல்பூ (6-Jun-15, 1:35 pm)
பார்வை : 1261

மேலே