பழசு பெருசு

எத்தனை செய்திகள்
எத்தனை பேரின் பொய்முகங்கள்
எத்தனை மகிழ்ச்சித் தகவல்கள்
திருமண தகவல்கள்
ஈமச் சடங்குகள்
தொலைபேசி கட்டண தகவல்கள்
சோபா கம்பெனி ..
புடவைக்கடை விளம்பரங்கள்
நீ வாங்கி ..
அமைதியாய் என்னிடம்
கொடுத்திருப்பாய்..?
என் வீட்டு தபால் பெட்டியே..
இன்று மட்டும் ..
ஏன்..
பொலிவிழந்து ..நிற்கின்றாய்..
ஓ..
நீ பழையதாய்ப் போனதால் ..
மாற்றி விடப் போகிறோம் உன்னை
என்று பேசியதைக் கேட்டு விட்டாயோ..
பத்திரமாய் உனக்கு ஒரு
இடம் தருவேன் ..
நிச்சயமாய் ..
அது முதியோர் இல்லமல்ல..
என் வீட்டின் அறைகளில்
ஒன்றில் ..
எங்களோடு ..
நீயும் இருப்பாய்!
எதைத் தூக்கி எறிவது
என்று
எங்களுக்குத் தெரியும் !

எழுதியவர் : கருணா (7-Jun-15, 5:00 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 416

மேலே